துணிவு திரைப்படத்தின் ஒரிஜினல் பேக்ரவுண்ட் ஸ்கோர் ஆல்பத்தை இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட்டுள்ளார்.

கோலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித்குமார். இவர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி இருந்த துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த மாதம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருந்தது.

ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகி இருந்த இப்படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இணையதளத்தை தெறிக்க விட்டு ரசிகர்களை உற்சாகத்துடன் ஆட்டம் போட வைத்தது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்தின் ஒரிஜினல் பேக்ரவுண்ட் ஸ்கோர் ஆல்பம் வெளியாகி இருப்பதை தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்து இப்படத்தில் பணியாற்றிய பயணத்திற்கும் அனைவருக்கும் நன்றியையும் கூறி பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவால் உற்சாகமடைந்த ரசிகர்கள் இதனை வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.