நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வைரல்.

தென்னிந்திய திரை உலகில் அல்டிமேட் ஸ்டாராக திகழ்பவர் தான் அஜித் குமார். இவர் தற்போது வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் துணிவு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் கதாநாயகியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இப்படம் குறித்த புகைப்படங்கள் மற்றும் அப்டேட்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் துணிவு படம் பற்றின சிரியா அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதில் அவர், இயக்குனர் வினோத்துடன் படத்தின் பின்னணி இசை குறித்து ஆலோசனை நடத்தியதாக பதிவிட்டிருக்கிறார். மேலும் இப்படத்தின் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறி இருக்கிறார். இந்த பதிவு ரசிகர்களின் மத்தியில் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.