சர்வதேச அளவில் மாஸ் காட்டி வரும் துணிவு திரைப்படம் குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான துணிவு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்து இருந்தது. போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகி இருந்த இப்படம் கடந்த 8 ஆம் தேதி netflix தளத்திலும் வெளியாகி தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று மாஸ் காட்டி வருகிறது.

இந்நிலையில் துணிவு திரைப்படம் netflix தளத்தில் கடந்த வாரம் ஆங்கிலம் அல்லாத பிரிவில் உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட முதல் 3 படங்களில் இடம் பிடித்திருப்பதாக புதிய தகவலை படக்குழு மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.