this week bigg boss 8 eviction update
this week bigg boss 8 eviction update

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெற்றிகரமாக தொடங்கி வைத்தார்..

18 போட்டியாளர்கள் வீட்டுக்குள் சென்ற நிலையில் 24 மணி நேரமினேஷன் என அனைவராலும் நாமினேட் செய்யப்பட்டு சாச்சனா நேற்று வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்கள் மற்றும் பிக் பாஸ் போட்டியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் சௌந்தர்யா, அருண் பிரசாந்த், ரவீந்தர், ரஞ்சித் ,முத்துக்குமார், மற்றும் ஜாக்குலின் என ஆறு பேர் நாமினேட் ஆகியுள்ளனர்.

இதில் யார் வெளியேறுவார் என்று எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது குறிப்பாக இந்த வாரம் விளையாட்டின் போது ரவீந்தருக்கு காலில் அடிப்பட்டது.

அவரால் இந்த நிகழ்ச்சியை தொடர முடியாவிட்டால் அவர் வெளியேறிடுவாரா? என்ற கேள்வி ரசிகர் மத்தியயில் இருந்துள்ளது. ரவீந்தர் வெளியேறுவது நல்லதா? கெட்டதா?இல்லை மற்ற ஆறு போட்டியாளர்களின் யார் வெளியேறினால் சிறப்பு என்று கமெண்டில் சொல்லுங்கள்.