
Thiruvannamalai Deepam – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 14-ஆம் நாள் கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டது.
இவ்விழாவின் 10-ம் நாளான இன்று, அதிகாலை மூன்றரை மணிக்கு அண்ணாமலையார் கருவறை முன்பாக பரணி தீபம் ஏற்றப்பட்டது.
பின்னர் கோவிலின் உள்பிரகாரத்தில் உள்ள அனைத்து சந்நிதானத்திலும், பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இவ்வாறு பரணி தீபம் ஏற்றும் போது, ஏராளமான பக்தர்கள் ‘அரோகரா’ முழக்கத்துடன் தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர்.
மேலும் இன்று மாலை 6 மணிக்கு கோவிலில் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயர மலையின் உச்சியில் ‘மகா தீபம்’ ஏற்றப்பட உள்ளது. மகா தீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர்.
இந்நிலையில், திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றபடும் மலைக்கு செல்ல, திருவண்ணாமலை அரசு கல்லூரியில் பக்தர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
மேலும் “முதலில் வரும் 2,500 பக்தர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும்” என்று திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகி தெரிவித்துள்ளார்.