விரைவில் கோலங்கள் 2 சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக திருச்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற சீரியல்களில் ஒன்று கோலங்கள். திருச்செல்வம் இயக்கத்தில் வெளியான இந்த சீரியல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தற்போது திருச்செல்வம் அவர்கள் எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கி வருகிறார். கோலங்கள் 2 சீரியல் நிச்சயம் வரும் என தெரிவித்துள்ளார். இதனால் இதில் தேவையானதுக்கு பதில் யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆனால் நாயகியாக நடிக்க போவது யார் என்பது குறித்த விவரங்களை திருச்செல்வம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.