விஜய் நம்பர் 1 எப்படி சொல்லலாம் தில் ராஜூவின் பேச்சால் விமர்சனம் செய்துள்ளார் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்த படத்துக்கு போட்டியாக அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது. துணிவு திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவதால் அந்த படத்திற்கு அதிகமாக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது.

இப்படியான நிலையில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் அளித்த பேட்டி ஒன்றியம் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகர் விஜய் தான். அதனால் அவருக்கு வாரிசு படத்துக்கு துணிவு படத்தை காட்டிலும் அதிகமான திரையரங்குகளை ஒதுக்க வேண்டும் என பேசியிருந்தார்.

தில் ராஜூவின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் வினோத் திருப்பூர் சுப்ரமணியம் விஜய் அஜித்தின் நம்பர் ஒன் யார் என்பது எங்களுக்கு தெரியாதா? அதைப்பற்றி அவர் எதுக்கு பேசிய ரசிகர்களிடம் பிரச்சனையை உண்டு பண்ண வேண்டும்? என காட்டமாக பேசியுள்ளார்.

அதோடு இன்னும் எந்த படத்துக்கும் திரையரங்குகளை ஒதுக்கவில்லை அப்படி இருக்கும்போது துணிவு படத்துக்கு அதிகமான திரையரங்குகள் என அவர் எப்படி சொல்ல முடியும் என கேள்வி எழுப்பி உள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.