கெத்தாக வாரிசு படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Third Look Poster of Varisu : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்.

தில் ராஜூ தயாரிப்பில் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், நடிகர் ஸ்ரீகாந்த், யோகி பாபு, ஷாம், குஷ்பு ஜெயசுதா என எக்கச் சக்கமான பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

விஜயின் பிறந்தநாள் விருந்தாக நேற்று மாலை இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று 11:44 மணிக்கு இரண்டாம் லுக் போஸ்டர் வெளியானது.

மேலும் மூன்றாவது லுக் லுக் போஸ்டர் இன்று மாலை 5.02 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி தற்போது மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.