![Thimuru Pudichavan Tamil Review Thimuru Pudichavan Tamil Review](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2018/11/Thimiru-Pudichavan-Shooting-Spot-Stills-5-696x430.jpg)
Thimuru Pudichavan Tamil Review :
விஜய் ஆண்டனி நடிப்பில் கணேஷா இயக்கத்தில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியான படம் திமிரு புடிச்சவன்.
கதைக்களம் :
சாதாரண குடும்பத்தை சேர்ந்த விஜய் ஆண்டனி போலீஸ் பணியில் சேருகிறார். அவருக்கு ஒரே ஓரு தம்பி. அவர் தான் அவருடைய உலகம்.
திடீரென ஒரு நாள் அவருடைய தம்பி காணாமல் போய் விடுகிறார். அப்படியே சில காலங்கள் ஓட அதன் பின்னர் விஜய் ஆண்டனி வேறொரு ஊருக்கு பணியாற்றம் செய்யப்படுகிறார்.
அந்த இடத்தில் திடீரென ஏற்பட்ட கொலை, நிவேதா பெத்துராஜ் மீது ஏற்பட்ட காதல் என படம் விறுவிறுப்படைய தொடங்குகிறது. இறுதியில் என்ன நடந்தது என்பதே இப்படத்தின் கதை களம்.
விஜய் ஆண்டனி :
விஜய் ஆண்டனி பொதுவாகவே நல்ல நடிப்பை வெளிப்படுத்துவர். இந்த படத்திலும் அப்படி தான். ரசிகர்களை படம் அருமை என சொல்ல வைக்கும் அளவிற்கு தன்னுடைய நடிப்பை இயல்பாகவே கொடுத்துள்ளார்.
நிவேதா பெத்துராஜ் :
நிவேதா பெத்துராஜ் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் படத்திற்கு மெருகேற்றியுள்ளார். மேலும் பல இடங்களில் காமெடியிலும் இறங்கி அடித்து ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.
சாய் தீனா :
இப்படத்தில் சாய் தீனா வில்லனாக நடித்துள்ளார். வழக்கம் போலவே இந்த படத்திலும் தன்னுடைய நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார்.
தொழில்நுட்பம் :
இசை, எடிட்டிங் என இரண்டையும் விஜய் அண்டனியே கவனித்துள்ளார். அதுவும் சிறப்பாகவே கொடுத்துள்ளார்.
இயக்குனர் கணேஷா :
இயக்குனர் கணேஷா படம் முழுவதையும் அழகான கோர்வையாக கொடுத்துள்ளார். ஆக்ஷன், எமோஷன், ரொமான்ஸ் என அனைத்திலும் கவனம் செலுத்தியுள்ளார்.
ஒரே ஒரு குறை தான் திமிரு புடிச்சவன் என டைட்டிலை வைத்து விட்டு விஜய் ஆண்டனியை சாதுவாக காட்டியுள்ளார். விஜய் ஆண்டனிக்கு கொஞ்சம் கோபத்தையும் சேர்த்திருக்கலாம்.
தம்ப்ஸ் அப் :
1. போலீஸ் மீதான எதிர்மறை எண்ணங்களை போக்கியுள்ளார் இயக்குனர்.
2. திருநங்கைகளை பற்றி பேசி இருப்பது பாராட்டத்தக்கது.
3. நிவேதா பெத்துராஜின் காமெடிகள்
தம்ப்ஸ் டவுன் :
1. விஜய் ஆண்டனிக்கு இன்னும் கொஞ்சம் கோபத்தையும் காட்டி இருக்கலாம்.
2. படத்தில் எமோஷன் காட்சிகள் கொஞ்சம் ஓவர் தானோ என நினைக்க வைக்கிறது.
இருப்பினும் மொத்தத்தில் திமிரு புடிச்சவன் வித்தியாசமான கதையில் விறுவிறுப்பான திரைக்கதையுடன் பக்கா பேமிலி என்டர்டைனர் படமாக உருவாகியுள்ளது.