Thimiru Pudichavan

Thimiru Pudichavan Release Date : சர்கார் படத்துடன் திமிரு பிடிச்சவன் படம் மட்டும் தான் மோத இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்த படத்துடன் மோத இருப்பதாக பல படங்கள் வரிசை கட்டி ரிலீஸ் தேதியை அறிவித்து இருந்தன.

முதலில் மோத இருந்த NGK, விஸ்வாசம் ஆகிய படங்கள் தீபாவளி ரிலீஸில் இருந்து விலகி கொண்டன.

இதனையடுத்து தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா, ஆர்.கே சுரேஷின் பில்லா பாண்டி, விஜய் ஆண்டனியின் திமிரு பிடிச்சவன் ஆகிய படங்கள் அறிவிப்பை வெளியிட்டு இருந்தன.

ஆனால் சமீபத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா விலகி கொண்டது. மேலும் பில்லா பாண்டி படத்தின் ரிலீஸ் குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாவில்லை .

இதனால் விஜய் ஆண்டனியின் திமிரு பிடிச்சவன் படம் மட்டுமே விஜயுடன் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமிரு பிடிச்சவன் படத்தை கணேஷ் இயக்க பாத்திமா தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.