தி லெஜண்ட் திரைப்படத்தில் நடித்த நடிகை ஊர்வசி ரவுத்தெல்லா பெற்ற சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.

தமிழ் சினிமாவில் அறிமுக நடிகராக “தி லெஜன்ட்” படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார் அருள் சரவணன். இவர் தமிழகத்தில் மிகவும் பிரபலமான சரவணா ஸ்டோர் கடையின் உரிமையாளர் ஆவார். இவரது நடிப்பில் நேற்றைய தினம் வெளியான இப்படத்தை ஜேடி ஜெர்ரி இயக்க கதாநாயகியாக ஊர்வசி ரவுத்துள்ள நடித்திருந்தார்.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில் இப்படத்தில் அண்ணாச்சி அருள் சரவணனுக்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை ஊர்வசி ரவுத்தெல்லாவுக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது Miss Diva Universe 2015 தில் பட்டம் பெற்றிருக்கும் நடிகை ஊர்வசி ரவுத்தெல்லா ஒரு சில பாலிவுட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ‘தி லெஜன்ட்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியிருக்கிறார். இந்நிலையில் இப்படத்திற்காக இவருக்கு ரூ. 20 கோடி சம்பளமாக அளிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.