ரஜினி போல் அட்டகாசமாக நடித்து காண்பித்து சிறுவர்களின் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் குறித்த அப்டேட்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் தற்போது ரஜினி போல் சூப்பராக நடித்துக் காண்பிக்க இரண்டு சிறுவர்களின் வீடியோ வைரலாகி வருகிறது.

அதாவது, மன்னன் திரைப்படத்தில் ரஜினி மற்றும் கவுண்டமணி வேலையை கட்டடித்து விட்டு திரையரங்கிற்கு செல்லும் காமெடியான காட்சி இன்று பார்த்தாலும் அவ்வளவு காமெடியாக இருக்கும்.

தற்போது அந்த காமெடி காட்சியை இரண்டு சிறுவர்கள் தத்துரூபமாக நடித்து ரீ-கிரியேட் செய்துள்ளனர். அந்த அசத்தலான வீடியோ தற்போது ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங் ஆகி இணையத்தை கலக்கி வருகிறது.

இதோ அதை நீங்களே பாருங்க