தனி ஒருவன் 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையத்தை அதிர வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் தனி ஒருவன்.

இந்த படம் வெளியாகி எட்டு வருடங்கள் ஆன நிலையில் அடுத்த வருடம் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. ஏற்கனவே இது குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த வருடம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மித்ரனை தேடி வரும் புதிய வில்லன் யார் என்ற கேள்வியுடன் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.