விக்ரம் நடித்து வரும் தங்கலான் திரைப்படத்தில் இணைந்த பிரபல ஹாலிவுட் நடிகர் குறித்து படக்குழு பகிர்ந்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். ரசிகர்களால் அன்புடன் சியான் என்று அழைக்கப்பட்டு வரும் இவர் பொன்னியன் செல்வன் 1 திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இப்படத்தில் இணைந்திருக்கும் பிரபல ஹாலிவுட் நடிகர் குறித்து படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது. அதன்படி இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல ஹாலிவுட் நடிகரான டேனியல் கால்டாகிரோன் இணைந்திருப்பதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்துள்ளது. அது தற்போது படம் மீதுள்ள ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரிக்க செய்து இணையதளத்தில் வைரலாகி வருகிறது.