thangalaan movie ott release issue
thangalaan movie ott release issue

தங்கலான் படத்தின் OTT ரிலீசில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் தங்கலான் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பு பெற்றது.

பா ரஞ்சித் இயக்க இந்த படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, ஹரி கிருஷ்ணன் அன்பு துறை, பசுபதி போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் வசூலிலும் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் இந்த படம் ஓடிட்டியில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது அதிலோரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதாவது தங்கலான் படம் புத்த மதம் குறித்து புனிதமான முறையிலும் வைணவம் குறித்து நகைச்சுவையாக சித்தரிக்கும் காட்சிகள் படத்தில் உள்ளன. இந்தப் படம் ott தளத்தில் வெளியானால் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக திருவள்ளுரைச் சேர்ந்த பொற்கொடி என்பவர் தங்கலான் படத்தை OTT தளத்தில் வெளியிட தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்த தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.