Tamannaah

Tamannaah Gallery : படு கவர்ச்சியான உடையில் பிரபல நடிகரின் படத்தில் செம குத்தாட்டம் போட்டுள்ளார் தமன்னா. அந்த புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், விக்ரம் என பெரும்பாலான நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.

இந்நிலையில் இவர் தற்போது விஷால் தமிழில் வெளியிட உள்ள KGF என்ற படத்தில் கன்னட நடிகரான யாஷுடன் சேர்ந்து இப்படத்தில் ஐட்டம் பாடல் ஒன்றிற்கு நடனமாடியுள்ளார்.

கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க வயலில் 1970-ம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்தை வைத்து உருவாகியுள்ளது இந்த படம்.

மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என மொத்தம் 5 மொழிகளில் வரும் டிசம்பர் 21-ம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை வெளியாகியுள்ள KGF படத்தின் டீஸர், ட்ரைலர் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

KGF

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.