Thaman About Thalapathy 65
Thaman About Thalapathy 65

தளபதி 65 படம் குறித்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் பிரபலம் ஒருவர்.

Thaman About Thalapathy 65 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள மாஸ்டர் படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க உள்ளார்.

இந்த படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக உள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இதனை இயக்க உள்ளார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

கோலிவுட் பாலிவுட் வரை TRPயில் வெளுத்துக் கட்டும் விஜய்.. வெளியான அசத்தல் தகவல்.!

இதனை லைவ் வீடியோ சாட் ஒன்றில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தொகுப்பாளர் விஜயின் படத்திற்கு இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது அது உண்மையா என கேட்டுள்ளார்.

அதற்கு தமன் ஆமாம் விஜயின் படத்திற்கு இசையமைப்பது மகிழ்ச்சியாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர். முதல் முறையாக இந்த கூட்டணி அமைவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/VijayTrendsPage/status/1257950820852588546?s=19