நடிகை தமன்னா நடித்துள்ள பப்ளி பவுன்சர் திரைப்படத்தின் பாடல் தல,தளபதி ரசிகர்களை இணைந்த ஆட்டம் போட வைத்துள்ளது. அதனால் இந்த வீடியோ பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thala,Thalapathi fans join to enjoy the Tamannah movie song :

இந்திய திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக ஜொலிப்பவர் தான் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமானவர். தமிழில் இவர் கடைசியாக ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்து கலவையான விமர்சனங்களை பெற்றிருந்ததை தொடர்ந்து நடிகை தமன்னா தற்பொழுது பிறமொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

தல,தளபதி ரசிகர்களை ஆட்டம் போட வைத்த தமன்னா படத்தின் பாடல்!!… வீடியோ சாங் வைரல்.

அந்த வகையில் அவரது நடிப்பில் தற்போது வெளியாக இருக்கும் திரைப்படம் தான் “பப்ளி பவுன்சர்”. இப்படத்தை மதுர் பண்டர்க்கார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் தமன்னா உடன் சவுரப் சுக்லா, அபிஷேக் பஜாஜ் மற்றும் சாஹில் வைத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கதை மற்றும் திரைக்கதையை அமித் ஜோஷி, ஆராதனா தேப்நாத் மற்றும் மதுர் பண்டர்கார் எழுதி உள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

தல,தளபதி ரசிகர்களை ஆட்டம் போட வைத்த தமன்னா படத்தின் பாடல்!!… வீடியோ சாங் வைரல்.

வரும் செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் இந்த படம் வெளியாக உள்ளது என்று படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் “பித்து புடிச்சு” என்கின்ற பாடல் சமீபத்தில் வெளியாகி உள்ளது. இந்த பாடல் தல, தளபதி ரசிகர்களை குறிப்பிட்டு உருவாகியுள்ளதால். இப்பாடலை தல,தளபதி ரசிகர்கள் இணைந்து ரசித்து ஆட்டம் போட்டு வருகின்றனர்.

Pithu Pidichi - Babli Bouncer | Tamannaah Bhatia | Palakkad Sreeram | Deepika Varadarajan