இந்திய அளவில் தளபதி 66 ஹாஸ்டேக் டிரெண்டாகி உள்ளது.

Thalapathy66 Trending in India : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை தில் ராஜூ தயாரிக்கிறார்.

இந்திய அளவில் டிரெண்டான தளபதி 66 - இணையத்தை தெறிக்கவிட்ட விஜய் ரசிகர்கள், விஷயம் என்ன தெரியுமா??

நேற்று வம்சி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடும் என்பதால் அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக் கூறி வந்தனர். அப்போதே பாடகர் க்ரிஷ் வம்சி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தது மட்டுமல்லாமல் விஜயுடன் இணைந்து பணியாற்ற உள்ள படத்தைப் பார்க்க காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் தளபதி 66 இயக்குனருக்கு வாழ்த்துக்கள் எனக் கூறி சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்யத் தொடங்கினர்.

இதனால் தளபதி 66 ஹாஸ்டேக் இந்திய அளவில் ட்ரண்ட்டாகி உள்ளது.