Thalapathy Vijay Video

Thalapathy Vijay Video : பிரபல டிவி சேனல் ஒன்றில் தளபதி விஜயின் டயலாக்குகள் அரங்கத்தையே அதிர வைத்துள்ளன. அந்த விடியோவை தளபதி ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

தளபதி விஜய் என்றாலே தனி மாஸ் தான்.. சில நிகழ்ச்சிகளில் அவர் இல்லை என்றாலும் அவருடைய வசனங்களே போதும், அரங்கமே அதிர்ந்து விடும்.

அப்படி தான் தற்போது சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சி ஒன்றில் சுட்டி பையன் ஒருவன் அப்படியே விஜயை போலவே டைலாக் பேசி அசத்தியுள்ளார்.

டைலாக் மட்டுமல்ல ஆக்ஷன், டான்ஸ் என அட்டகாசம் செய்துள்ளார்.

அதிலும் குறிப்பாக ரோபோ ஷங்கரை பார்த்து என் நண்பன் தலய கேட்டதா சொல்லு என கூற அரங்கமே ஆரவாரத்தில் ஆட்டம் கண்டுள்ளது.

அதோடு நிறுத்தாமல் தான் கொடுத்ததாக கூறி அஜித்திடம் கொடுத்து விடுங்கள் என ஒரு பிளைன் கிஸ் கொடுத்தது ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்க :