Thalapathy Vijay

Thalapathy Vijay Show : பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விரைவில் தளபதி விஜய் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வருபவர் விஷால். இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சன் நாம் ஒருவர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்த நிகழ்ச்சியில் தான் விஜய் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது கடந்த நியூ இயர் அன்று நடிகர் விஷால் விஜய்க்கு போன் செய்து வாழ்த்து கூறியுள்ளார்.

அப்போது தளபதி விஜய் விஷாலிடம் நீங்கள் தொகுத்து வழங்கி வரும் சன் நாம் ஒருவர் நிகழ்ச்சியை பார்த்தேன். நன்றாக உள்ளது.

இது போல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நானும் உதவ ஆசைப்படுகிறேன் என கூறியுள்ளார்.

இந்த தகவல் தற்போது வெளியில் கசிய விஜய் ரசிகர்கள் அனைவரும் அப்போ இந்த நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்ள போகிறாரா? என்று ஆவலுடன் கேட்டு வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.