விஜய் தொடங்கும் புதிய கட்சியின் பெயர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது கோட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பலர் இணைந்து நடித்து வருகிறார்கள். 

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் 2 வருடம் பிரேக் எடுத்து 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராக உள்ளார். இப்படியான நிலையில் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி புதிய கட்சியை பதிவு செய்ய ப்ருஸ்லி ஆனந்த் தலைமையிலான குழு டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அதுமட்டுமின்றி கட்சிக்கு தமிழக முன்னேற்ற கழகம் என பெயர் வைக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் இந்த விஷயம் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.