தமிழ் சினிமாவின் இன்றைய பாக்ஸ் ஆபீஸ் கிங்காக திரையுலக தளபதியாக விளங்கி வருபவர் விஜய். மக்களுக்காக தெரிந்தும் தெரியாமலும் இன்று வரை பல உதவிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தளபதி விஜய் சத்தமில்லாமல் பார்வையற்ற சிறுவனான சூப்பர் சிங்கர் போட்டியாளர் செந்தில்நாதன் என்பவருக்கு உதவி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதனை பிரபல தொகுப்பாளராக மா.க.ப ஆனந்த் தான் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது விஜயை நான் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துள்ளேன் மிகவும் நல்லவர் அமைதியானவர்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செந்தில் நாதன் என்பவரை அழைத்து இருந்தார். அவருடன் நானும் சென்றிருந்தேன்.

அந்த பார்வையற்ற சிறுவனுக்கு விஜய் பணம், ஐ-பாட் ஆகியவற்றை பரிசாக கொடுத்தார், கொடுத்தது மட்டுமில்லாமல் இதை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் யாருக்கும் சொல்ல கூடாது எனவும் கூறியதாக மா.க.ப கூறியுள்ளார்.