thalapathy 69 movie pooja stills
thalapathy 69 movie pooja stills

தளபதி 69 படத்தின் பூஜை நடந்த முடிந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தளபதி 69 என்ற திரைப்படம் உருவாக உள்ளது. எச் வினோத் இயக்கத்திலும், KVN ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாக உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

மேலும் கௌதம் வாசுதேவ் மேனன் ,பூஜா ஹெக்டே ,மமீதா பைஜு, பாபி தியோல் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடிக்க உள்ளனர்.

தளபதி விஜயின் கடைசி படமான இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடந்துள்ளது.

இந்த பூஜையின் புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு உள்ளது. புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.