thalapathy 69 movie latest update
thalapathy 69 movie latest update

தளபதி 69 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தளபதி 69 என்ற திரைப்படம் உருவாக உள்ளது. H.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாக உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

மேலும் மமிதா பைஜூ, பிரகாஷ்ராஜ் ,பூஜா ஹெக்டே, போன்ற போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இந்த படத்தின் பூஜை கோலாகலமாக முடிந்த நிலையில் தற்போது இந்த படத்தில் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதில் அனிருத் இசையில் உருவாகும் ஒரு பாடலுக்கு 500 நடன கலைஞர்களுடன் இணைந்து விஜய் நடனமாட போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தத் தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே விஜயின் கடைசி படம் என்பதால் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.