அதெல்லாம் உண்மை இல்லை நம்பிடாதீங்க என தளபதி 67 படத்தின் வதந்திக்கு படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Thalapathy 67 Team About Samantha News : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து அவர் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லியாக சமந்தா படையப்பா நீலாம்பரி போல படு மாஸான கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்று தகவல் பரவியது.

இதனை தொடர்ந்து தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ள தகவலின் படி அது உண்மையில்லை முற்றிலும் வதந்தி என தெரிய வந்துள்ளது. இதனால் சமந்தாவை வில்லியாக பார்க்க ஆசைப்பட்ட ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.