தளபதி 67 திரைப்படம் வேற லெவல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமாக இருக்கும் என ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Thalapathy 67 Movie Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தினை தொடர்ந்து அடுத்ததாக வம்சி இயக்கத்தில் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார் தளபதி விஜய். தற்காலிகமாக இந்த படத்திற்கு தளபதி அறுபத்தி ஆறு என பெயரிடப்பட்டுள்ளது.

டி வில்லியர்ஸ் அவுட்டானதும், ஓங்கி ஒரு அடி குடுத்த மகன் : வைரல் பதிவு

இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிப்பார் என கூறப்பட்டு வருகிறது. தற்போது இது குறித்து ஜிவி பிரகாஷ் அளித்துள்ள தகவல் என்னவென்றால் விஜய் மற்றும் வெற்றிமாறன் இணைந்து பணியாற்ற ஆவலோடு இருக்கின்றனர். ஆனால் அதற்கான நேரம் இன்னும் அமையவில்லை.

இந்த மாதிரி தான் இனிமே வரணும் – Rudra Thandavam Special Show | Rishi Richard, Dharsha | HD

விஜய் மற்றும் வெற்றிமாறன் இணையும் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ள படமாக இருக்கும். இவர்கள் இருவரும் அடுத்த வருடத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.