மாஸ்டர் படம் கொடுத்த வெற்றியால் தளபதி 67 படத்தின் பூஜையில் படக்குழு சூப்பர் முடிவு ஒன்றை எடுத்து உள்ளது.

Thalapathy 67 Movie Pooja Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜய் மஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை லலித்குமார் தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டு வந்தது.

இந்த நிலையில் படத்தின் பூஜை குறித்து லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தின் பூஜை வரும் அக்டோபர் 3ஆம் தேதி நடைபெறும் என தகவல்கள் கசிந்துள்ளன. இதே தினத்தில் தான் மாஸ்டர் படத்தின் பூஜை நடைபெற்றது என்பது கவனிக்கத்தக்கது.

மாஸ்டர் படம் கொடுத்த வெற்றி காரணமாக தளபதி 67 படத்திற்கும் இதே தினத்தை பூஜைக்காக குறித்துள்ளனர் தளபதி 67 படக்குழுவினர். ‌‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.