தளபதி 67 படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Thalapathy 67 Movie Director Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தினை நெல்சன் திலீப் குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

வழிபாடுகளில், சங்கு முக்கிய இடம் வகிப்பது ஏன்?

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் ராஜு தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக தற்போது தளபதி 66 என பெயரிடப்பட்டுள்ளது. ‌‌‌‌‌ இந்த படத்தின் படப்பிடிப்பு வெகு விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில் தளபதி 67 படம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

விமல் மற்றும் தம்பி ராமைய்யா கலந்துகொண்ட Production No.3 பூஜை..! | Vimal | Thambi Ramaiah | Tamil HD

அதாவது தளபதி விஜயை வைத்து மாஸ்டர் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ் மீண்டும் தளபதி விஜய்யை இயக்கப் போவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.