Thalapathy 65 Movie Details

தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக விஜய் 65 படம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

Thalapathy 65 Movie Details : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து யாருடைய இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்ற பெரிய விவாதமே சமூக வலைதளங்களில் நடந்து வந்தது.

மேலும் தளபதி விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.

தற்போது இந்தக் கூட்டணி உறுதியாகியுள்ளது. மேலும் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 22ல் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக #தளபதி65, #Thalapathy65 போன்ற கேக்குகள் ட்விட்டர் டிரெண்ட்டிங்கில் இடம் பிடித்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.