Vijay 65
தளபதி 65 திரைப்படம் உறுதியாகி விட்டதாகவும் அதன் இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் பற்றிய தகவல்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 64 படத்தில் நடித்து வருகிறார். இன்னும் இந்த படமே முடியவில்லை அதற்குள் தளபதி 65 பற்றிய தகவல்கள் பரவ தொடங்கி விட்டன.

தொடர்ந்து பல தடவை இயக்குனர் வெற்றிமாறனின் பெயர் அடிபட்டு வந்த நிலையில் மீண்டும் அவரை பற்றியே தகவல் ஒன்று கசிந்துள்ளது.

ஆம், விஜய் 65 படத்தை வெற்றிமாறன் தான் இயக்குகிறார் எனவும் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார் எனவும் தகவல்கள் கூறுகின்றன, ஆனால் அறிவிப்பு இன்னும் வரவில்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.