Thalapathy 64 Update

Thalapathy 64 Update : தளபதி விஜயின் 64 படத்தின் இயக்குனர் உறுதியாகியுள்ளது. இது மல்டி ஸ்டார் படம் என்பதும் தற்போதும் உறுதியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி இருந்த சர்கார் படத்தை அடுத்து அட்லீ இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் ஷங்கர் அல்லது மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வைரலாகி இருந்தன.

தளபதி 64 இயக்குனர் மணிரத்தினம் தான் என்பது ஓரளவிற்கு உறுதியாகியுள்ளது. ஆம், மணிரத்தினம் அடுத்ததாக பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி உருவாக உள்ள படத்தை இயக்க உள்ளார்.

மல்டி ஸ்டார் படமாக உருவாக உள்ள இந்த படத்தில் தளபதி விஜய், சிம்பு, விக்ரம் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதுமட்டுமில்லாமல் இப்படத்திற்காக தளபதி விஜயின் போட்டோஷூட்டும் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளன. இதனால் தளபதி 64 மணிரத்தினம் இயக்கும் படமாக தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

Thalapathy 64

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.