Thalapathy 64

Thalapathy 64 : அட்லீ படத்திற்கு மீண்டும் முருகதாஸுடன் கூட்டணி அமைக்க உள்ளார் விஜய் என்பதை போல வெளியான டீவீட்டால் ரசிகர்கள் சிலர் குழப்பமடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

AGS நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த தளபதி 63 படத்தை அடுத்து யாருடன் கூட்டணி அமைப்பார் என்பது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அறிவிப்பு.

இந்நிலையில் தற்போது முருகதாஸின் பெயரில் அட்லீ படத்தை அடுத்து துப்பாக்கி 2 என்பது போல ஒரு ட்வீட் பதிவிடப்பட்டு இருந்தது.

ஆனால் இது பொய்யான தகவல் ஏனென்றால் அந்த பதிவு முருகதாஸின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள போலி கணக்கு.

இந்த டீவீட்டால் ரசிகர்கள் சிலர் குழப்பமடைந்துள்ளனர். மேலும் முருகதாஸ் ஒரு பேட்டியில் முதல் பாகத்தை விட சிறப்பான கதை அமைந்தால் மட்டுமே கத்தி 2, துப்பாக்கி 2 இயக்குவேன் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.