Thalapathy 64 to start from September second week | Vijay | Thalapathy | Lokesh Kanagaraj | Anirudh | Tamil Cinema News | Tamil Cinema Latest News
Thalapathy 64 to start from September second week

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் இரண்டாம் வாரம் துவங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Thalapathy 64 to start from September second week – அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

சிவா படத்துக்கு முன் மாஸ்டர் பிளான் போட்ட சூர்யா – வெளிவந்த ரகசியம்!

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த படத்தை இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர் மாநகரம் படத்தை இயக்கிவிட்டு தற்போது கார்த்தி நடிப்பில் கைதி படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் கேங்ஸ்டர் படம் என்றும் விஜய்க்கு ஏற்ற ஆக்‌ஷன் படம் என்றும் கூறியுள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறாராம். கத்தி படத்துக்கு பின் விஜய்யுடன் அவர் இணைவது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் போக இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன். எடிட்டராக பிலோமின் ராஜ் ஆகியோர் தற்போது ஒப்பந்தமாகியுள்ளனர்.

மேலும் விஜய்யின் மேனேஜர் ஜெகதீஸ் இதில் லைன் producer-ஆக ஒப்பந்தமாகி இருப்பதாக நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். இதுதான் தளபதி 64 படத்தின் மொத்த தொழில் நுட்ப அணி.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் இரண்டாம் வாரம் துவங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்குள் தளபதி 63 படத்தின் மொத்த வேலைகளையும் விஜய் முடித்துவிடுவாராம்.