Thalapathy 64 Release Date
தளபதி 64 படத்தின் ரிலீஸ் தேதி என்ற பெயரில் சமூக வளையதளங்களை வைரல் தகவல் ஒன்று ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 64. அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் படத்தை தொடர்ந்து விஜய் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் உறவினரான பிரிட்டோ தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், விஜய் சேதுபதி, மாளவிகா மோகன் என பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தளபதி 64 படத்தை படக்குழு 2020-ல் ஏப்ரல் 9-ம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இது பற்றி இன்னும் படக்குழு எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.