Thalapathy 63 Updates

Thalapathy 63 Updates : 

தளபதி 63 படத்தில் இருந்து மீண்டும் ரஜினி ஸ்டைலையே தளபதி விஜய் பின்பற்ற இருப்பதாகவும் இது குறித்து விஜய் அட்லீயிடமும் கூறி விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் மாஸ் அண்ட் கிளாஸை நம்பி மட்டுமே நடித்து வந்தவர். சுருக்கமாக சொல்ல போனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போலவே.

ஆனால் திடீரென இறுதியாக வெளியாகி இருந்த மெர்சல், சர்கார் ஆகிய படங்களில் தன்னுடைய டிராக்கை மாற்றி இருந்தார்.

அதாவது மத்திய அரசையும் மாநில அரசையும் விமர்சனம் செய்யும் விதமாக படம் அமையவே பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி படத்திற்கு விளம்பரம் தேடும் விதமாக காட்சிகள் அமைந்திருந்தன.

என்னதான் ரசிகர்கள் இதனை கொண்டாடி இருந்தாலும் விஜய் வழக்கமான எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

இதனை உணர்ந்து கொண்ட விஜய், இனியும் இதே வழியை பின்பற்ற கூடாது.. எவ்வித சர்ச்சைகளையும் விளம்பரங்களையும் எதிர்பார்க்காமல் ரசிகர்களின் விருப்பப்படி மாஸ் அண்ட் கிளாசை மட்டுமே நம்பி நடிக்கலாம் என முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து அட்லீயிடம் விஜய் பேசியுள்ளார், அதவாது தளபதி 63 ரசிகர்கள் எதிர்பார்க்கிறபடி மாஸாக இருக்கணும், அப்படி கதையை தயார் பண்ணுங்க என கூறியுள்ளார்.

விஜயின் இந்த முடிவு தளபதி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே போல் தளபதியின் நலம் விரும்பிகளையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.