Thalapathy 63 Poojai

Thalapathy 63 Poojai : தளபதி 63 படத்திற்கான பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் தளபதியான விஜய், முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி இருந்த சர்கார் படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து நடிக்க உள்ளார்.

AGS சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

படத்திற்காக லொகேஷனை தேர்ந்தெடுக்கும் பணியில் மும்மரமாக இறங்கிய அட்லீ சமீபத்தில் சென்னையில் பிரபல கல்லூரியை தேடி பிடித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து இன்று இப்படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன. அந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.