Thalapathy 63 Official

Thalapathy 63 Official : தளபதி 63 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வெளியாகி இருந்த சர்கார் படத்திற்கு பிறகு அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடிக்க உள்ளார்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான AGS நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் படத்தின் படப்பிடிப்புகள் வரும் 2019-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கும் எனவும் தகவல்கள் வைரலாகி இருந்தன.

இந்நிலையில் இன்று காலை இப்படத்தின் அறிவிப்பு மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருந்தன.

சமீபத்தில் கூட ப்ரொடக்ஷன் 19 என்ற பெயரில் இயக்குனர் அட்லீ என குறிப்பிட்டு இருந்த AGS நிறுவனத்தின் புதிய படத்தின் ஸ்டில் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது.

இந்நிலையில் தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதோ அந்த அறிவிப்பு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.