Thalapathy 63

Thalapathy 63 Photo : சொன்ன டைமிற்கு முன்பாகவே தளபதி 63 படத்தின் அறிவிப்பு இணையத்தில் லீக்காகியுள்ளது.

தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வெளியாகி இருந்த சர்கார் படத்திற்கு பிறகு அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடிக்க உள்ளார்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான AGS நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் படத்தின் படப்பிடிப்புகள் வரும் 2019-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கும் எனவும் தகவல்கள் வைரலாகி இருந்தன.

இந்நிலையில் இன்று காலை இப்படத்தின் அறிவிப்பு மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது AGS நிறுவனம் படத்திற்கு பூஜை போட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் ப்ரொடக்ஷன் நம்பர் 19 எனவும் இயக்குனர் அட்லீ எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் தளபதி 63 படத்தின் அறிவிப்பு இது தான் என ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இருப்பினும் 4.30 மணிக்கு வெளியாக உள்ள அறிவிப்பில் எந்த தகவல் வெளியாகும் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Thalapathy 63

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.