
Thalapathy 63 Character : தளபதி 63 படத்தில் விஜயின் கதாபாத்திரம் என்ன என்பதை பிரபலம் ஒருவர் அளித்துள்ள பேட்டியில் வாய் தவறி உளறியுள்ளார்.
தளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து AGS நிறுவனம் தயாரிப்பில் தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கிய அட்லீ குமார் இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடிக்க உள்ளார்.
ஸ்போர்ட்ஸை மையமாக கொண்டு உருவாக உள்ள இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளார். அதற்காக அறிவிப்பும் அதிகாரபூர்வமாக வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது பிரபலம் ஒருவர் அளித்த பேட்டியில் தளபதி 63 படத்தில் விஜயின் கதாபாத்திரம் என்ன என்பதை பற்றி உளறியுள்ளார்.
அதாவது இந்த படத்தில் விஜய் பிட்னஸ் டிரைனராக ( Fitness Trainer ) நடிக்க உள்ளதாகவும், அதற்காக கடுமையாக உடற்பயிற்சிகளை எல்லாம் விஜய் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இது ஒரு ஸ்போர்ட்ஸ் படம் தான் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த தகவல் தளபதி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
ஆனால் படத்தின் சீக்ரெட்ஸ்களை உளறி விட்டதால் அந்த பிரபலத்தின் மீது படக்குழுவினர் கோபமடைந்துள்ளனர்.