Thalapathy 63 announcement

Thalapathy 63 Announcement : தளபதி 63 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என அதிரடியாக தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி இருந்த சர்கார் படத்தை அடுத்து அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான AGS நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தற்போது இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

அதிகாரபூர்வமான தகவல் வெளியானதும் தான் எதுவும் உறுதியாகும் என்பதால் படத்தின் இயக்குனர் யார்? தயாரிப்பாளர் யார்? படத்தின் கதை என்னவாக இருக்கும்?

விஜயின் ரோல் என்னவாக இருக்கும்? நாயகி யார்? என பல மில்லியன் டாலர் கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.