தளபதி விஜயின் 67 ஆவது படத்தை “டான்” பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கும் “வாரிசு” திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக இணைந்துள்ளார்.

மேலும் இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்த அடுத்த தளபதி விஜய் எந்த இயக்குனருடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களின் இடையே உலாவி வருகிறது.

அந்த வகையில் கடந்த சில மாதங்களாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அட்லீயின் உதவி இயக்குனராக பணியாற்றி “டான்” எனும் மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது தளபதி விஜயிடம் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி ஒன் லைனர் கதையை கூறியுள்ளார். அந்தக் கதை விஜய்க்கு மிகவும் பிடித்துள்ளதால் அதனை மேம்படுத்த சொல்லிவிட்டாராம். என்ற இந்த தகவல் விஜயின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் இயக்குவார் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.