தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க இருக்கும் கதாநாயகி குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரையுலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். ஏராளமான ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைப்பில் பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைய இருக்கும் நிலையில் விஜய்யின் அடுத்த படமான ’தளபதி 68’ படம் குறித்த சுவாரசியமான தகவல்களும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தளபதி 68 திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது இப்படத்தில் நடிக்கப் போகும் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதன்படி, தெலுங்கு திரை உலகில் வளர்ந்து வரும் பிரபல முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி ஷெட்டி இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உலா வருகிறது.