இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கம் இருக்கும் தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் விஜய் மும்பை கேங்ஸ்டராக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரசிகர்களால் அன்போடு தளபதி என்று அழைக்கப்பட்டு வரும் நடிகர் விஜய் அவர்கள். தற்போது வம்சி படைப்பள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு எண்ணூரில் நடைபெற்று வருகிறது.

இதில் அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை தொடர்ந்து மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என பல ஹிட் படங்களை கொடுத்து தற்பொழுது முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “தளபதி 67” என்னும் திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது.

இது குறித்த எந்த அப்டேட்டும் இதுவரை உறுதியாக வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது ‘தளபதி 67’ திரைப்படத்தில் நடிகர் விஜய் மும்பை கேங்ஸ்டராக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமின்றி இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சமந்தா, திரிஷா, சஞ்சய் தத், கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்களால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.