தளபதி விஜயின் 67 வது திரைப்படத்தின் கதாநாயகி குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் அவர்கள் தற்போது வம்சி படைப்பள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், யோகி பாபு, ஸ்ரீகாந்த் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்த நிலையில் திரிஷா நடிக்க இருக்கிறார் என்ற தகவல் அண்மையில் வெளியாகி வைரலானது.

ஆனால் தற்போது இப்படத்தில் திரிஷா நடிக்கவில்லை என்றும் இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.