தலைவர் 173 படம் குறித்து வெளியான தரமான தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

தலைவர் 173 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

thalaivar 173 movie latest update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்த நிலையில் சுந்தர் சி முதலில் இயக்க இருந்தார்.ஆனால் அவர் அறிக்கையின் மூலம் இந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
அடுத்ததாக இந்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில் தற்போது பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்த படத்தை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது.
இது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கியதாகவும் சாய்பல்லவி மற்றும் கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இவர்களது கூட்டணிகள் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

thalaivar 173 movie latest update
