Thalaivar 167 First Look

Thalaivar 167 First Look : தலைவர் 167 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி பட்டய கிளப்பி வருகிறது. படத்திற்கு தர்பார் என பெயரிட்டுள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். நயன்தாரா நாயகியாக நடிக்க உள்ளார். அதே போல் யோகி பாபுவும் முதல் முறையாக ரஜினியுடன் இணைய உள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது தயாரிப்பு நிறுவனம் அதனை அதிகாரபூர்வமாக வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் போலீஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.