Thalaivar 166

Thalaivar 166 Title : முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பேட்ட படத்தில் நடித்துள்ளார்.

விஜய், சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா என பலர் இணைந்து நடித்துள்ள இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் சர்கார் படத்தை போல அரசியலை ஆழமாக பேசும் படமாக உருவாக உள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்திற்கு நாற்காலி என பெயல் சூட்டப்பட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்க மறுப்பு தெரிவித்து விட்டதால் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.