Thala Vs Thalapathy 2019

Thala Vs Thalpathy 2019 : இந்த வருடம் ( 2019 ) தமிழ் திரைத்துறையை ஆளப்போவது தல அஜித்தா? தளபதி விஜயா? என பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்து கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் மாஸ் குறையாத முன்னணி நடிகர்கள் என்றால் அது தல அஜித் மற்றும் தளபதி விஜய் தான். இவர்கள் இருவரும் தான் தற்போதைய தமிழ் சினிமாவின் இரு துருவங்கள்.

இன்று 2019 புது வருடம் பிறந்ததை அடுத்து பிரபல ஜோதிடர் ஒருவர் தமிழ் சினிமா 2019-ல் எப்படி இருக்கும்? உச்சத்தில் இருக்க போவது யார் என்பதை கணித்து கூறியுள்ளார்.

அந்த தகவல் அஜித், விஜய் என இரு தரப்பு ரசிகர்களையும் கொண்டாட வைத்துள்ளது.

ஆம், அது என்னவென்றால் படத்தால் கிடைக்கும் லாபம் விஜயை விட அஜித்திற்கு அதிகம் கிடைக்கும் என அந்த ஜோதிடர் கூறியுள்ளார்.

அதே போல் படங்களால் கிடைக்கும் புகழ் அஜித்தை விட விஜய்க்கு தான் அதிகம் கிடைக்கும். மொத்தத்தில் இந்த வருடத்தில் இவர்களின் நடிப்பில் எத்தனை படங்கள் வெளியானாலும் அவை அனைத்தும் ஹிட்டாகும்.

உச்சத்தில் இருப்பவர் யாராக இருப்பார் என்று பார்த்தால் அஜித் முதலிடத்தை பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அல்லது அஜித்தும் விஜயும் ஒரே நிலையில் இருப்பார்கள் என கூறியுள்ளார்.

மேலும் இருவருக்கும் 2019-ல் நவம்பர் வரை சிறப்பான வருடமாக இருக்கும் எனவும் கணித்து கூறியுள்ளார்.

மேலும் ரஜினி, கமல் உள்ளிட்டோர்களுக்கு இந்த வருடம் திரைத்துறையில் கொஞ்சம் பலவீனம் தான் எனவும் அந்த கணிப்பில் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.