Thala Vs Thalaivar : பொங்கலுக்கு எதிர்பார்க்கப்படும் படம் எது என எங்களது சமூக வளையதளத்தில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவில் தெரிய வந்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் பண்டிகை நாட்கள் என்றாலே புதிய படங்கள் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைக்கும். குறிப்பாக அஜித், விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் தான் மாஸ் காட்டும்.
இந்த வருட பொங்கலுக்கும் அப்படி தான் அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் பேட்ட ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகம் என்பதால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் எது என கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது.
ட்விட்டரில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் விஸ்வாசம், பேட்ட என இரண்டு படங்களும் சரி சமமான ஓட்டுகளை பெற்றுள்ளது.
ஆனால் யூ ட்யூபில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் விஸ்வாசம் 52% ஓட்டுகளை பேட்ட 48% ஓட்டுகளையும் பெற்றுள்ளது.
இதனால் கிட்டத்தட்ட இந்த இரண்டு படங்களுக்கும் சமமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது என்பதே உண்மை.
பொங்கலுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் படம் எது? #petta #visvaasam #ajith #rajini @rajinikanth @NayantharaU @trishtrashers @SimranbaggaOffc
— Kalakkal Cinema (@kalakkalcinema) November 14, 2018